கிம்புலா பனீஸ் எனப்படும் பனிஸ் வகையொன்று 34 ஆயிரத்து 600 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட சந்தையொன்றிலே குறித்த கிம்புலா பனிஸ் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தம்புள்ள பிரதேசத்தைச் சேர்ந்த சிலருக்கும் ஜெர்மனிய பிரஜைகளுக்கும் இடையில் இந்த பனிஸை கொள்வனவு செய்வது தொடர்பில் ஏலம் நடைபெற்றுள்ளது.
இந்த ஏல விற்பனையில் ஜெர்மனிய பிரஜைகள் 34 ஆயிரத்து 600 ரூபா விலையை நிர்ணயித்து அதனை கொள்வனவு செய்துள்ளனர்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட பனிஸை பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவனுக்கு ஜெர்மனிய பிரஜைகள் வழங்கியுள்ளனர்.
இதற்கு முன்னர் அநுராதபுரம் கலேபிந்துனுவெவ பகுதியில் இவ்வாறான ஓர் ஏல விற்பனையில் ஒரு கிம்புலா பனிஸ் 23 ஆயிரத்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டிருந்தது.
2 அடி நீளம் 1 அடி அகலம் மற்றும் 3 அடி உயரம் கொண்ட கொண்ட இந்த கிம்புலா பனிஸ், முதலை வடிவிலேயே செய்யப்பட்டமையும் விசேட அம்சமாகும்.