50 ஓட்டங்களுக்கு இலங்கை அணி ஆட்டமிழந்தது: இந்தியா நிதானமான துடுப்பாட்டம்

Date:

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது.

இதன்படி, இந்திய அணிக்கு 51 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

ஆரம்பம் முதலே பெரும் தடுமாற்றத்தை எதிர்கொண்டிருந்த இலங்கை அணி 50 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் அதிகபட்சமாக 17 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை அணியின் ஐந்து வீரர்கள் ஓட்டங்களை எதுவும் பெறாமல் ஆட்டமிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி சார்பில் மொஹமட் சிராஜ் ஆறு விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தனர்.

ஆசியக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அணி நிதானமாக துடுப்பெடுத்தாடி வருகின்றது.

51 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் இந்திய அணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 31 ஓட்டங்களை பெற்றுள்ளது.

2.4 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இன்னும் வெற்றிபெற இந்திய அணிக்கு 20 ஓட்டங்களே தேவைப்படுகின்றது.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...