நிலவும் மழையுடனான வானிலை காரணமாக நாட்டிலுள்ள 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, கண்டி, கேகாலை, களுத்துறை, இரத்தினபுரி, காலி, மாத்தறை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று மதியம் 12.30 வரையில் இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.