உயர்தரக் கல்வியை முடித்து மேற்படிப்பு மேற்கொள்ளவுள்ள மாணவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்புகள் மற்றும் எதிர்காலக் கற்கைத் துறைகள் தொடர்பிலான வழிகாட்டல் நிகழ்ச்சியொன்றை பேராதனை பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் ஊக்குவிப்பு அமர்வுகள், அனைத்துத் துறைகளுக்குமான பாடத் தேர்வு வழிகாட்டல்கள், பொதுவான கற்கை நெறி வழிகாட்டல்கள், ஒன்லைன் பதிவுக்கான வழிகாட்டல்களுடன் கலந்துரையாடல் அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.
‘வெற்றியை நோக்கி’ எனும் மகுடத்திலான இந்த நிகழ்ச்சி 16 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் பி.ப.3.00 மணி வரை பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் ஈஓஈ பெரேரா அரங்கில் நடைபெறும்.
மேலதிக தகவல்களை 0778789782 என்ற இலக்கத்தில் பெற்றுக் கொள்ளலாம்