ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக இலங்கை கிரிக்கெட் குழாம் இந்தியா பயணமாகியது.
கிரிக்கெட் வீரர்கள் உட்பட 35 பேர் இந்த குழாமில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி. உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.
இலங்கை குழாமின் தலைவராக தசுன் சானக்க பெயரிடப்பட்டுள்ளதுடன் உப தலைவராக குசல் மென்டிஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதுதவிர, பெத்தும் நிஸ்ஸங்க, குஷல் ஜனித் பெரேரா, திமுத் கருணாரட்ன, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, தனஞ்சய டி சில்வா, துஷான் ஹேமந்த, மஹிஷ் தீக்ஷன, துனித் வெல்லாலகே, கசுன் ரஜித்த, மதீஸ பத்திரண, லஹிரு குமார மற்றும் டில்ஷான் மதுஷங்க ஆகியோர் இலங்கை அணியில் பெயரிடப்பட்டுள்ளனர்.
The Sri Lanka Cricket team has set sail for India to roar at the ICC Men's Cricket World Cup 2023! 🏏🏆 Let's go, #LankanLions!#CWC23 pic.twitter.com/Ls3bghWyBD
— Sri Lanka Cricket 🇱🇰 (@OfficialSLC) September 26, 2023