அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிகள் மீதான இணையத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
தொழில்நுட்பம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சர் கனக ஹேரத் விடுத்த அறிவித்தலுக்கு அமைய இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை அலுவலகங்கள் உட்பட பல அரச நிறுவனங்கள் மீது கடந்த ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி முதல் 26ஆம் திகதி வரை இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக அமைச்சரவை அலுவலகம் உட்பட 300 அரச நிறுவனங்களின் சுமார் 5,000 மின்னஞ்சல் முகவரிகளின் தரவுகள் காணாமல் போயுள்ளதக தெரியவந்துள்ளது.
இந்த நிலையிலே, இணையத் தாக்குதல் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதனிடையே, இணையத் தாக்குதல் தொடர்பில் தகவல் மற்றும் தொடர்பாடல் நிறுவனம், இலங்கை கணினி அவசர பதில் மன்றம் ஆகியவற்றிடமிருந்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.