இலங்கையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அடிப்படைவாதம் பரவி வருவதாக குற்றச்சாட்டு!

Date:

இலங்கை முழுவதும் இந்தியாவின் ஆர்.எஸ்.எஸ் (Rashtriya Swayamsevak Sangh) அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக பாராம்பரிய இந்துக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்து அறநெறி பாடசாலைகள், நலன்புரி வேலைத்திட்டங்கள்,உதவிகளை பகிர்ந்தளிப்பது உட்பட பல்வேறு செயற்பாடுகள் மூலம் பாராம்பரிய இந்துக்களை அந்த அடிப்படைவாதத்திற்கு தூண்டப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இரத்தினபுரி இறக்குவானை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் அண்மையில் நடைபெற்ற இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றுக்கு அங்குள்ள பாரம்பரிய இந்துக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் Rashtriya Swayamsevak Sangh (RSS) அமைப்பு இலங்கையில் இந்து அடிப்படைவாதம் பரவ உதவி வருவதாக பாரம்பரிய இந்துக்கள் கூறியுள்ளனர்.

RSS என்பது இந்தியாவின் வலதுசாரி இந்து தேசியவாத,இராணுவ, தொண்டு மற்றும் போராட்ட அமைப்பு என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

 RSS அமைப்பின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்பிலும் பல முறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியின் ஆதரவை பெற்றுள்ள RSS அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய அந்த அமைப்பு உலகில் உள்ள மிகப் பெரிய வலதுசாரி அமைப்பு என கருதப்படுகிறது.

5 முதல் 6 மில்லியன் உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த அமைப்புக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் 56 ஆயிரத்து 859 கிளைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...