‘ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’:’செனல் 4′ தொடர்பில் கோட்டாபய அறிக்கை

Date:

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான சனல் 4 இன் சமீபத்திய ஆவணப்படத்தின் உள்ளடக்கங்களை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிராகரித்துள்ளார்,

மேலும் இந்த ஆவணப்படம் 2005 ஆம் ஆண்டு முதல் ராஜபக்சவின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் பெரும்பாலும் ராஜபக்சவுக்கு எதிரான போராட்டம் எனவும் தெரிவித்துள்ளார்.

நேற்று அதிகாலை வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியுள்ள இந்தக் காணொளி தொடர்பில் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “ஈஸ்டர் தாக்குதலுக்கும் எனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. உரிய தாக்குதலுக்கு தொடர்புடையவர்கள் குறித்த விசாரணைக்கு நானே உத்தரவிட்டேன்.

2005 இலிருந்து ராஜபக்சர்களின் பாரம்பரியத்தை கருமையாக்கும் நோக்கில் வெளியிடப்பட்டதே சனல் 4 காணொளி.

ராஜபக்சர்களுக்கு எதிராக குறித்த சனலில் ஒளிபரப்பப்பட்ட முந்தைய படங்களைப் போலவே இவையும் பொய்கள் ஆகும்.

என்னை அதிபராக அமர்த்துவதற்காக இஸ்லாமிய தீவிரவாதிகளின் குழு கொடிய குண்டுவெடிப்புகளை நடத்தியதாக கூறுவது முற்றிலும் அருவருப்பானது.

அரசியல் நிலைப்பாட்டில் இருந்து சிலர் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தாலும், நான் பொதுப் பதவியில் இருந்த போதெல்லாம் ரோமன் கத்தோலிக்க சமூகத்திற்கு தனிப்பட்ட முறையில் அனைத்து சேவைகளையும் செய்துள்ளேன் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...