- 5000,000 ரியால் (4 கோடி 25 லட்சம்) பெறுமதியான முதற் பரிசு சவூதியரான அய்யூப் பின் அப்துல் அஸீஸுக்கு.
சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீல் ஆலு ஸுஊத் அவர்களின் கண்காணிப்பின் கீழ், இஸ்லாமிய விவகார அமைச்சின் ஏற்பாட்டில், 43ஆவது ‘மன்னர் அப்துல் அஸீஸ் சர்வதேச அல்குர்ஆன் மனனப் போட்டி கடந்த 6 ஆம் திகதி நிறைவடைந்தது.
இதில் 117 நாடுகளில் இருந்தும் 166 போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தார்கள். ஐந்து பிரிவுகளாக இடம்பெற்ற மேற்படி போட்டியின் மொத்த பரிசுத்தொகை நான்கு மில்லியன் ரியால்களாகும். முதல் பிரிவில் முதலிடம் பெறுபவருக்கு பரிசுத் தொகை 5 இலட்சம் ரியால்களாகும்.
அதற்கமைய போட்டியில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் கௌரவமும் மன்னர் சார்பாக கலந்து கொண்ட புனித மக்காவின் பிரதி ஆளுநர் இளவரசர் பத்ர் பின் சுல்தான் பின் அப்துல் அஸீஸ் ஆலு சுஊத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.
சவூதியைச் சேர்ந்த அய்யூப் பின் அப்துல்அஜிஸ் அல்-வுஹைபி முதல் பரிசுக்குரியவராக அறிவிக்கப்பட்டு முதல் பரிசான 500,000 சவூதி ரியால் (இலங்கை நாணயப் படி 4 கோடி 25 லட்சம்) ஆளுநரால் வழங்கி வைக்கப்பட்டது.
அல்ஜீரியாவின் Saad bin Saadi Sleim இரண்டாவது இடத்தையும் Abu Al-Hassan Hassan Najm மூன்றாவது இடத்தையும் பெற்று பரிசில்களை பெற்றுக் கொண்டனர்.
இப்போட்டியில் இலங்கையிலிருந்தும் ஒரு மாணவர் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
உலகின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்களை அல்குர்ஆனை மனனமிடத் தூண்டுவது இப்போட்டியின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும்.
இதேவேளை இவ்வேற்பாட்டிற்காகவும், இதற்கு நிதியுதவி அளித்ததற்காகவும், மன்னர் ஸல்மான் அவர்களுக்கும், இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் அவர்களுக்கும் நன்றி கூறிய இஸ்லாமிய விவகார அமைச்சர், அப்துல் லதீப் ஆலு ஷைக் அவர்கள், அல்குர்ஆனுக்குப் பணிவிடை செய்வதில் சவூதி அரேபிய அரசாங்கத்தின் முயற்சியை இது பறைசாற்றுகின்றது என்றும் தெரிவித்தார்.
இந்த மங்களகரமான நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஏராளமான பிரமுகர்கள், அறிஞர்கள், ஷேக்மார் மற்றும் அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளைச் சேர்ந்த தூதர்கள், அரசு அதிகாரிகள், பாதுகாப்புத் தலைவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய இமாம்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
#Video |
On behalf of the King…the Deputy Governor of Makkah honors the winners of the #King_Abdulaziz_International_Competition for Memorization, Recitation and Explanation of the Holy Quran in its (43rd) session, which is organized and supervised by the… pic.twitter.com/t1bD27U0eF
— Ministry of Islamic Affairs 🇸🇦 (@Saudi_MoiaEN) September 6, 2023