ஐக்கிய நாடுகள் பொது சபையின் 78 ஆவது கூட்டத்தொடர் நிவ்யோர்க்கில் நடந்துவரும் நிலையில் இன்று(21) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரை நிகழ்த்தவுள்ளார்.
இலங்கை நேரப்படி இன்று இரவு ஜனாதிபதி உரை இடம்பெறவுள்ளது.
ஐக்கிய நாடுகளின் பொதுச்சபை கூட்டத்தொடருக்கு இணையாக நேற்று (20) ஆரம்பிக்கப்பட்ட நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் தொடர்பான 2023 கூட்டத்தொடரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உரையாற்றியிருந்தார்.