காதி நீதிபதிகளுக்கான கொடுப்பனவு அதிகரித்து கொடுக்கப்பட வேண்டும்!

Date:

முஸ்லிம்களுக்கான விவாக விவகாரத்து சட்டம் எமது உரிமையாகும். இது திருத்தப்படுவதாயின் முஸ்லிம்களின் விருப்பத்துக்கு அமைவாகவே செய்யப்படவேண்டும்.

அதற்கமைவாகவே அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா திருத்தியமைக்க வேலையைச் செய்திருந்தாலும் அதனை வேறு சமயத்தவர் தமக்கு வேண்டியபடி மாற்ற முயல்வதை அனுமதிக்க முடியாது என மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி நீதி அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார்.

விவாக விவகாரத்துச்சட்டம் தொடர்பான அறிக்கையை 27 இஸ்லாமிய சிவில் சமூக அமைப்புக்களின் முன்னிலையில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவிடம் கையளிக்கும் போதே அசாத் சாலி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த இறுதி அறிக்கையானது 18 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் விருப்பத்துக்கு அமைவாக தயாரிக்கப்பட்டதாகும்.

விவாக, விவாகரத்துச் சட்டமானது திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸைப் பின்பற்றியதாகவே தயாரிக்கப்படவேண்டியதாகும் என பெண் சட்டத்தரணி நுஸ்ரா ஸருக்கும் இங்கு கருத்துத் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த டாக்டர் மரீனா தாஹா இஸ்லாம் தோன்றியது முதல் கடந்த 1400 வருடங்களுக்கு மேலாகவும் பெண்காதி நீதிபதிகள் நியமிக்கப்பட்ட வரலாறு கிடையாது இது ஆழ்ந்த ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய விடயமாகும்.

அடுத்து காதிநீதிபதிகளுக்கு ஒரு சிறிய தொகையே வழங்கப்பட்டு வருகிறது.
கொடுப்பனவாக அதனை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் எனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...