இன்று சனிக்கிழமை கொண்டாடப்பட்ட சவுதி அரேபியாவின் 93வது தேசிய தினத்தில், கால்பந்து சூப்பர் ஸ்டார் கிறிஸ்டியானோ ரொனால்டோ சவுதியின் பாரம்பரிய உடைகளை அணிந்து கொண்டு வாள் ஏந்தியவாறு கலந்து கொண்டார்.
அவரது கிளப், அல் நாசர் பகிர்ந்த வீடியோவில், முன்னாள் ரியல் மாட்ரிட் மற்றும் மான்செஸ்டர் யுனைடெட் நட்சத்திரம் வெள்ளை நிற தோப்பை அணிந்து, அதன் மேல் கருப்பு பிஷ்ட் அணிந்து, வாளைப் பிடித்தபடி அரபு நடனத்தில் ஈடுபட்டுள்ளார்.