ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி நடைபெறும் தினங்களில் இன்று (09) முதல் கொழும்பு ஆர். பிரேமதாச விளையாட்டரங்கை சுற்றியுள்ள வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
2023 ஆம் ஆண்டுக்கான ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் 9, 10, 12, 14, 15ஆம் திகதிகளிலும், 17ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாச மைதானத்தில் இறுதிப் போட்டியும் இடம்பெறவுள்ளது.