கல்விப் பொதுத்தராதர சாதாரண தர சான்றிதழ் பாடத்திட்டத்தில் சினிமாவை ஒரு பாடமாக சேர்க்க முன்மொழியப்பட்டுள்ளது.
அதன்படி, நேற்றைய தினம் இலங்கை அறக்கட்டளையில் நடைபெற்ற இலங்கை சினிமாவின் எதிர்காலம் குறித்த புலமையாளர் விரிவுரையில் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதில் மூத்த ஒளிப்பதிவாளர் அசோக ஹந்தகமவும் கலந்து கொண்டார். ” பாடசாலை பாடத்திட்டத்தில் நாடகம் மற்றும் அரங்கியல் என்ற பாடம் உள்ளது. எனினும், அந்த பாடத்தில் இருந்து சினிமா தொலைந்துவிட்டது.
அரசாங்கமோ அல்லது தனியார் துறையோ தலையிட்டு முழு அளவிலான திரைப்படப் பாடசாலையை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் ” என அவர் தெரிவித்தார்.