ஜனாதிபதிக்கும் பசிலுக்கும் இடையே விசேட கலந்துரையாடல்

Date:

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

இருதரப்புக்கும் இடையில் சுமார் ஒரு மணிநேரம் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுப்பினர்கள் குழுவிற்கு அமைச்சரவை அமைச்சுப் பதவி வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஜனாதிபதி சாதகமாக பதிலளிக்காத நிலையில், இருவருக்கும் இடையில் நீண்டகாலமாக கலந்துரையாடல்கள் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், ஜனாதியுடனான கலந்துரையாடலில் எதிர்வரும் வரவு-செலவுத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன், சலுகைகள் தொடர்பிலும் இருதரப்புக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிடப்படுகிறது.

 

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...