நபியவர்களின் போதனைகள் மூலம் சிறந்த சமுதாயத்தை உருவாக்குவது இலங்கை சமூகத்தின் பொறுப்பாகும்: விதுர விக்கிரமநாயக்க

Date:

தர்மத்தை தனது தனிப்பட்ட நம்பிக்கையை மட்டுமின்றி, தனது வாழ்க்கையில் கடைப்பிடித்து மனிதநேயம், நீதி மற்றும் ஒழுக்கம் நிறைந்த சமுதாயத்தையும் கட்டியெழுப்ப அர்ப்பணித்த நபிகளாரின் பிறந்த நாள் உலகம் முழுவதுமுள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டு வருவதாக புத்தசாசன  மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்  விதுர விக்கிரமநாயக்க மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஹம்மத் நபி அவர்களுக்கு 40 வயதாக இருந்தபோது இறைவன் நபியாகத் தேர்ந்தெடுத்தான். மேலும் அவர் இஸ்லாத்தின் இறுதி நபி என்று அறியப்படுகிறார்.

இறைகட்டளைகளை பின்பற்றி மக்களை நல்வழிப்படுத்துவது அவரின் போதனைகளாக இருந்தது. இலங்கை முஸ்லிம்கள் நபிகள் நாயகத்தின் போதனைகளை பின்பற்றி நல்லதொரு சமுதாயத்தை கட்டியெழுப்ப இனம், மதம், சாதி அல்லது வேறு எந்த வேறுபாடும் இல்லாமல் முன்னோடியாக செயற்படுவது தேசத்தின் பாக்கியம் எனலாம்.

வருடாந்தம் கொண்டாடப்படும் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதுடன், தீவிரவாதம் இல்லாமல் மிதமான வழியில் அமைதி மற்றும் தியாகத்துடன் நாம் அனைவரும் ஒன்றிணைந்து சிறந்த புரிந்துணர்வுடன் பணியாற்ற வேண்டும்.

சகோதரத்துவத்தை அதிகப்படுத்தி நபியவர்களின் போதனைகளால் அறிமுகப்படுத்தப்பட்ட நல்ல சமுதாயத்தை உருவாக்கும் உன்னதப் பணியை நிறைவேற்றுவது தற்போதைய இலங்கை சமூகத்தின் பொறுப்பாகும்.

அதற்காக நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை மற்றுமொரு சந்தர்ப்பமாக கொண்டு செயற்படுகின்ற இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு எனது இனிய மீலாதுன் நபி நல்வாழ்த்துக்கள்.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...