ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடு திரும்பியுள்ளார்.
துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான இ.கே. 650 விமானம் மூலம் இன்று காலை 8.30 மணியளவில் அவர் நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
G77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவின் ஹவானாவுக்கு பயணமானார்.
கியூப விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொள்வதற்காக கடந்த 17 ஆம் திகதி அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.