நாளை மறுதினம் புதன்கிழமை நடைபெறவுள்ள மல்வானை அல்-முபாரக் தேசியக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொளவார்.
இந்நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்தவும் விசேட அதிதியாக ஜனாதிபதியின் ஆலோசகர் ருவன் விஜயவர்த்தனவும் வருகைத் தரவுள்ளனர்
அன்றைய தினம் நூற்றாண்டு நினைவு மலர் வெளியீட்டு வைக்க இருப்பதுடன் ஆசிரியர் விடுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு தூதுவர்கள், கல்விமான்கள், புத்திஜீவிகள் பழைய மாணவர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
1922 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இக்கல்லூரியை அமைப்பதற்கான காணியை சமூக சேவையாளரும் அக்காலத்தில் பிரபல வர்த்தகருமான மர்ஹூம் அஹமத் லெவ்வை முஹம்மத் சாலிஹ் ஹாஜியார் அவர்களால் வழங்கப்பட்டதாக ஊடகப் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத் ‘நியூஸ்நவ்’க்கு தெரிவித்தார்.
மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதன் முதலில் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு மல்வானை மக்கள் பாரிய பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது