‘ஹாரி பாட்டர்’ புகழ் டம்பிள்டோர் காலமானார்

Date:

ஹாரி பாட்டர் திரைப்படத்தில் நடித்த நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இவருடைய மறைவு ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் 2004ம் ஆண்டு வெளியான ஹாரி பாட்டர் திரைப்படத்தில் புரபசர் ஆல்பஸ் டம்பிள்டோர் கதாப்பாத்திரத்தில் நடித்தார். இவருடைய நடிப்பு ஹாரி பாட்டர் திரைப்படத்தில் சிறப்பாக இருந்தது. மேலும் இவருடைய நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

ஐரிஸ் நடிகரான மைக்கேல் கேம்பன் அவர்கள் 8 பாகங்களாக வெளி வந்த ஹாரி பாட்டர் திரைப்படத்தில் முதல் 6 பாகங்களில் நடித்திருந்தார். முதல் ஆறு பாகங்களில் நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் சிறப்பாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் தி ஓமன், தி லாஸ்ட் செப்டம்பர், சர்ச்சில்ஸ் சீக்ரெட், தி பேக்கர், தி குட் நைட், கிங் ஆஃப் தீவ்ஸ் உள்பட 50 திரைப்படங்களுக்கும் மேல் நடித்துள்ளார். இவர் கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான ஜூடி, கார்டிலியா ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

82 வயதான நடிகர் மைக்கேல் கேம்பன் அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...