இஸ்ரேல் – பலஸ்தீன் மோதல்: பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்

Date:

மத்திய கிழக்கு பகுதியில் உள்ள இலங்கையர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் காரணமாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு இலங்கை வெளிவிவாகார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

ஏதேனும் அவசர நிலை ஏற்படுமாயின் Tel Aviv (இஸ்ரேல்) மற்றும் Ramallah (பலஸ்தீன்) ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் தொடர்ந்தும் தொடர்பில் இருக்குமாறும் வெளிவிவகார அமைச்சு இலங்கையர்களை வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், மத்திய கிழக்கில் தற்போது நிலவும் மோதல் நிலைமை தொடர்பில் இலங்கை பிரஜைகள் எந்தவொரு உதவியினையும் பெறுவதற்கு வெளிவிவகார அமைச்சு இரண்டு அவசர தொலைபேசி இலக்கங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவினால் இவ்வாறு அவசர தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதன்படி, மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்கள் 0094711 757 536 அல்லது 0094711 466 585 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொள்வதன் மூலம் எந்தவொரு உதவிகளையும் பெற்றுக்கொள்ள முடியுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், வெளிவிவகார அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவை வழக்கமான அலுவலக நேரங்களில் +94 112 338 837 என்ற தொலைபேசி இலக்கம் மற்றும் repatriation.consular@mfa.gov.lk எனும் மின்னஞ்சல் முகவரி ஊடாக தொடர்பு கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...