இஸ்ரேல் மீது பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் திடீர் தாக்குதல்

Date:

இஸ்ரேல் மீது ஹமாஸ் உள்ளிட்ட பாலஸ்தீனிய ஆயுத குழுக்கள் திடீர் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகின்றது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு, மேற்குகரை பகுதியை முகமது அப்பாஸ் தலைமையிலான அரசாங்கமும் நிர்வகித்து வருகின்றன.

எனவே ஹமாஸ் அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக அறிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பை போன்றே பாலஸ்தீனியன் இஸ்லாமிக் ஜிகாத் உட்பட மேலும் சில ஆயுதக்குழுக்களும் காசா முனைஇ மேற்கு கரையில் செயல்பட்டு வருகின்றன.

மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும்இ பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

இந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களின் திடீர் தாக்குதலால் இஸ்ரேலில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்புப்படையினர் அதிரடியாக களமிறக்கப்பட்டுள்ளனர்.

மேலும், போர் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், போருக்கு தயார் என்றும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது காசா முனையில் இருந்து ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக்குழுக்கள் திடீரென அதிரடி தாக்குதல் நடத்தி வருவதால் மத்திய – கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

அச்சமற்ற துணிகரமான ஊடகவியலாளர்: மறைந்த இக்பால் அத்தாஸ் அனுதாபச் செய்தியில் ஹக்கீம்

பாதுகாப்பு மற்றும் அரசியல் விவகாரங்களில் அச்சமின்றி துணிச்சலுடனும், தன்னம்பிக்கையுடனும் எழுதிய சிறப்பான...

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை குறைவடையும் வாய்ப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை நாளையிலிருந்து (15) குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக,...

சத்தியாகிரக போராட்டத்தை கைவிட்ட விமல்!

புதிய கல்விச் சீர்திருத்தங்களை அடுத்த வருடம் வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத்...

போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பின் இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா. தகவல்.

காசாவில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டதற்குப் பிந்தைய இஸ்ரேலின் தாக்குதல்களில் சுமார் 100 பலஸ்தீன...