ஈஸ்டர் தாக்குதலால் உலமா மாணவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு!

Date:

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்­கு­தல்­களின் பின்பு பரீட்சைத் திணைக்­களம் வரு­டாந்தம் நடத்தி வந்த அல்­ஆலிம் பரீட்சையை நிறுத்தியதால்  அரபுக் கல்­லூரி மாண­வர்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளா­கி­யுள்­ளனர்.

குறிப்­பிட்ட அல்­ஆலிம் பரீட்சை இறு­தி­யாக 2018ஆம் ஆண்டு நடத்­தப்­பட்­டது. 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் நடத்­தப்­பட்­டதன் பின்பு, தாக்­கு­த­லுடன் தொடர்­பு­பட்­ட­வர்­களில் பலர் அல்­ஆலிம் பட்டம் பெற்­ற­வர்கள் எனக் கண்­ட­றிந்த அர­சாங்கம் அப்­ப­ரீட்­சையை நடத்­தா­ம­லி­ருக்க தீர்­மா­னித்­த­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

2019 முதல் இன்று வரை அல்­ஆலிம் பரீட்சை நடத்­தப்­ப­டா­ம­லி­ருப்­ப­தற்கு அல்­ஆலிம் பரீட்­சைக்கு பயிலும் மாண­வர்­க­ளுக்கு ஒழுங்­கான பாடத் திட்டம் அமுலில் இல்லை என்றே காரணம் கூறப்­பட்டு வந்­துள்­ளது. சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரிகள் இந்தக் கார­ணத்­தையே தெரி­வித்­துள்­ளனர்.

இவ்­வி­வ­காரம் தொடர்பில் பாது­காப்பு தரப்­பினர் ஏற்­பாடு செய்த கலந்­து­ரை­யா­டல்கள், பாரா­ளு­மன்ற தெரிவுக் குழு கூட்­டங்­களில் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் பிர­தி­நி­திகள், முஸ்லிம் கல்­வி­மான்கள், முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எடுத்துக் கூறியும் உரிய நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை.

இது தொடர்பில் ‘கல்வி அமைச்சு மற்றும் பரீ­ட்சை திணைக்­க­ளத்தின் அதி­கா­ரி­க­ளுடன் பல கட்ட பேச்­சு­வார்த்­தைகள் நடத்­தியும் இது­வரை அல்­ஆலிம் பரீட்­சைக்­கான ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை என அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உல­மாவின் கல்விப் பிரிவு  வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி அமைச்­சினால் சமய ஆலோ­சனை சபையின் கூட்­ட­மொன்று அண்­மையில் நடை­பெற்­றது.

அந்தக் கூட்­டத்­திலும் பரீட்­சைக்­கான பாடத் திட்டம் தொடர்பில் வின­வப்­பட்­டது. அல்­ஆலிம் பரீட்­சைக்­கான பாடத்­திட்டம் சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கு ஏற்­க­னவே கைய­ளிக்­கப்­பட்டு விட்­ட­தாக முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் தெரி­வித்தார்.

இக்­கூட்­டத்தில் சமய ஆலோ­சனை சபையில் அங்கம் வகிக்கும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் பிர­தி­நி­தி­களும் கலந்­து­கொண்­டார்கள்.

கல்வி அமைச்­சரின் தலை­மையில் நடை­பெற்ற இக்­கூட்­டத்தில் அல்­ஆலிம் பரீட்சை நடத்­து­வது பற்­றிய தீர்­மா­னத்தை விரைவில் அறி­விப்­ப­தாக அதி­கா­ரி­க­ளினால் தெரி­விக்­கப்­பட்­டது. ஆனால் இது­வரை எது­வித பதிலும் வழங்­கப்­ப­ட­வில்லை.

தற்­போது ஐந்து வருட கால­மாக அல்­ஆலிம் பரீட்­சையை நடத்­தாது நிறுத்தி வைத்­தி­ருப்­பது மாண­வர்­க­ளுக்கு பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளதாக  தெரிவிக்கப்படுகின்றன.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...