ஒக்டோபர் மாதம் தேசிய வாசிப்பு மாதம்: கல்வியமைச்சு பிரகடனம்

Date:

 ஒக்டோபர் மாதத்தை தேசிய வாசிப்பு மாதமாகக் கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ளது.

‘நினைத்த இடத்திற்கு செல்லவும், -வாசிப்பதற்கு ஒரு புத்தகத்தை எடுக்கவும்’ என்பதே இவ்வருட வாசிப்பு மாதத்திற்கான கருப்பொருளாகும்.

ஒக்டோபர் மாதத்தை வாசிப்பு மாதமாக கல்வியமைச்சு பிரகடனம் செய்துள்ள போதிலும், ஒக்டோபர் 23 முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை பாடசாலை நூலக வாரமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.

அதனை 23 ஆம் திகதி பாடசாலை நூலக தினமாகவும், 24 ஆம் திகதி நூலகச் சூழல் சுத்தம் செய்யும் தினமாகவும், 25 ஆம் திகதி நூல்களைப் பாதுகாத்தல் தினமாகவும், 26 ஆம் திகதி நூல் சேகரிப்பு தினமாகவும், 27 ஆம் நாள் நூலகப் பயன்பாட்டு மாணவர்களை கௌரவிக்கும் தினமாகவும் கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

வாசிப்பு மாதத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 110 பக்கங்களைக் கொண்ட பாடசாலை நூலக மற்றும் கற்றல்வள நிலையங்களின் திருத்தப்பட்ட ஆலோசனைக் குறியீடொன்றை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...