கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலை அபிவிருத்திக் கிளையின் ஏற்பாட்டில் மீலாதுன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விழா இசுறுபாய, பத்தரமுல்லயில் கல்வி அமைச்சின் கேட்போர் கூடத்தில் திங்களன்று (02) நடைபெற்றது.
கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், தேசிய ஜக்கியத்துக்கான சர்வமத கூட்டமைப்பின் முஸ்லிம் விவகார சம-தலைவர் அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹசன் மௌலானா அல்-காதிரி அவர்களினால் விசேட மீலாத் உரை நிகழ்த்தப்பட்டது.
கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் திருமதி என்.என்.மாளவியாரச்சி, கல்வி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் திரு. ஹேமந்த பிரேமதிலக, கல்வி அமைச்சின் வெளியீடுகள் பிரிவு ஆணையாளர் திரு. Z. தாஜுதீன், கல்வியமைச்சின் முஸ்லீம் பாடசாலைகள் அபிவிருத்தி கிளையின் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுத்தீன், கல்வி அமைச்சின் உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், கொழும்பு ரோயல் கல்லூரி, ஸாஹிரா கல்லூரி, டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி, ஹமீத் அல்ஹுஸைன் கல்லூரி, மல்வானை அல்முபாரக் மத்திய கல்லூரி பாடசாலை மாணவ மாணவிகள் உட்பட விஷேட விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.