நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் அட்டூழியங்கள் நடந்திருக்காது: டிரம்ப்

Date:

நான் ஜனாதிபதியாக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் போராளிகள் திடீரென எதிர்பார்க்காத வகையில் இஸ்ரேல் நாட்டிற்குள் புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஜோ பைடன் அரசை விமர்சித்துள்ளார்.

சமீபத்தில் கைதிகள் பரிமாற்றம் செய்ததுடன், ஈரானின் 6 பில்லியன் டொலர் பணத்தை பரிமாற்றம் செய்ய அமெரிக்கா சம்மதம் தெரிவித்ததை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.

இந்த நிலையில் இஸ்ரேல் மீதான தாக்குதல் கொடியது. குழந்தைகள், இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். நான் உங்களுடைய அதிபராக இருந்தபோது, வலிமையின் காரணமாக நாம் அமைதியை பெற்றிருந்தோம்.

தற்போது நமக்கு பலவீனம், சிக்கல், குழப்பம் உள்ளது. நான் அதிபராக இருந்திருந்தால், இஸ்ரேலில் நாம் பார்த்துக் கொண்டிருக்கும் அட்டூழியங்கள் ஒருபோதும் நடந்திருக்காது” என்றார்.

Popular

More like this
Related

சஜின் வாஸ் குணவர்தன மார்ச் 24 வரை விளக்கமறியலில்!

நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்...

ரியாத், துபாய்க்கான தினசரி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் காரணமாக உலகளாவிய ரீதியாக பணவீக்கம் ஏற்படும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்சூழல் காரணமாக எரிபொருள் பாதுகாப்பு உயர்மட்ட பேசுபொருளாக...

சஜின் வாஸ் குணவர்தன கைது!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன இன்று (9) இலஞ்ச...