ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், பெபிலியான சுனேத்ரா தேவி ரஜமஹா விஹாரையின் விஹாராதிபதியுமான, மெதகொட அபயதிஸ்ஸ நாயக்க தேரரின் பிறந்த தினத்தை முன்னிட்டு சர்வமத தலைவர்கள் வாழ்த்துக்களையும் ஆசிர்வாதங்களையும் வழங்கியிருந்தனர்.
நேற்றையதினம் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிதஸ்வ மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தி, சர்வ மதத் தலைவர்களான சிவ ஸ்ரீ கலாநிதி பாபுசர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஷ்-ஸெய்யித் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி மற்றும் கலாநிதி நிஷான் குரே பாதிரியார் உள்ளிட்ட சர்வ மதத் தலைவர்கள் அன்னாரின் விஹாரைக்கு விஜயம் செய்தனர்.
இந்த நிகழ்வின் போது சர்வமதத் தலைவர்களுடன் இன மத ஒற்றுமைக்கான எதிர்கால வேலைத்திட்டங்களை முன்னெடுத்து செல்லும் விஷேட கலந்துரையாடலும் இடம்பெற்றது.