ஸ்ரீலங்கன் விமான சேவை தொடர்பில் அமைச்சர் நிமல் விடுத்துள்ள அறிவிப்பு

Date:

சரியான நேரத்தில் புறப்பட முடியவில்லை என்பதற்காக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானங்களை புறக்கணிக்க வேண்டாம் என கப்பல் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் பல விமானங்கள் தாமதமாக புறப்படுவதால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்படுவதால், பயணிகளை மாற்று விமானங்களை பயன்படுத்துமாறு கூற வேண்டிய நிலை ஏற்படும். விமான தாமதம் குறித்து அதிகாரிகளும் முரண்பட்ட கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

எவ்வாறாயினும், சில அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய சம்பள அதிகரிப்பை வழங்க முடியாது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸுக்குச் சொந்தமான விமானங்கள் தாமதமாகவே புறப்படுகின்றன. இதற்கான உரிய காரணத்தை விமான நிறுவனம் வெளியிடவில்லை.

என்றாலும், உரிய நேரத்துக்கு செல்ல முடியாது பயணிகள் பாரிய அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...