இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள் உட்பட 1,537பேர் கொல்லப்பட்டனர்

Date:

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர்  ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து ஹமாஸ் படையினர் மீது இஸ்ரேல் எதிர் தாக்குதல் நடத்தியது. இருவரும் நடத்திவரும் தாக்குதலில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து இருக்கின்றனர

ஹமாஸ் அமைப்பினருக்கு தக்க பதிலடி கொடுத்துவரும் இஸ்ரேல், பணயக் கைதிகளை விடுவிக்கும் வரை காசா முற்றுகை பகுதியில் மனிதாபிமான உதவிகளை வழங்க அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்துள்ளது. அங்கு ஒரு சொட்டு தண்ணீரோ, வெளிச்சமோ இருக்காது என்று இஸ்ரேல் அமைச்சர் எச்சரித்திருக்கிறார்.

இந்நிலையில் இரு தரப்பினரும் நடத்திவரும் தாக்குதலுக்கு தினமும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி வருகின்றனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி விட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 45 பேர் பலியாகியிருக்கின்றனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 500 குழந்தைகள், 276 பெண்கள் உள்பட 1537 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர்.

6,612 பேர் காயமடைந்துள்ளனர். ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் 31 பேர் பலியாகினர். 600பேர் காயமடைந்தனர்.

ஹமாஸ் நடத்திய தாக்குதலில் இஸ்ரேலில் பலியானோர் எண்ணிக்கை 1,300 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 220 பேர் ராணுவ வீரர்கள் ஆவர். தாக்குதலில் 3,200பேர் காயமடைந்து இருக்கின்றனர்.

3.34 இலட்சம் பலஸ்தீனியர்கள் வீடுகளை இழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ஐ.நா. முகாம்களில் 2.2 இலட்சம் பேர் உள்ளனர்.

சிரியாவின் தலைநகர் டகாகஸ் மற்றும் வடக்கு நகரான அலெப்போலில் உள்ள சர்வதேச விமான நிலையங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலில் நடத்தியதில் விமான நிலையங்களின் ஓடுபாதைகள் சேதடைந்தன.

இஸ்ரேலில் நடந்துவரும் தாக்குதலில் அமெரிக்க குடிமக்கள் 25பேர் கொல்லப்பட்டதாகவும், 17பேரை காணவில்லை என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேபோன்று பிரெஞ்சு குடிமக்கள் 12 பேர் கொல்லப்பட்டதாகவும், 16 பேரை காணவில்லை எனவும் கூறப்படுகிறது. 

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...