– லத்தீப் பாரூக்
2023ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் திகதி பலஸ்தீன சுதந்திர போராட்ட இயக்கமான ஹமாஸ் இஸ்ரேல் மீது ஆரம்பித்த தாக்குதல் பலஸ்தீன மக்களையும் அவர்களது உரிமைகளையும் அலட்சியம் செய்ய முடியாது என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளதாக சர்வதேச ரீதியில் முக்கிய பத்தி எழுத்தாளர்கள் பலர் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
‘இந்த விளையாட்டில்’ போராடடக்காரர்கள் தமக்கு ஒரு இடம் உள்ளது என்பதையும் தம்மால் நிபந்தனைகளை விதிக்க முடியும் என்பதை நிரூபித்துள்ளனர்.
பலஸ்தீன மக்களை ஏமாற்றும் வகையில் இடம்பெற்ற சமாதான செயற்பாடுகள், அரபுலகம் இஸ்ரேலுடன் ஏற்படுத்தி வந்த இயல்பு நிலை கோட்பாடுகள் என்பன பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பு நீடிக்கின்ற வரைக்கும் தோல்வியைத் தழுவியதாகவே இருக்கும்.
மேலும் பலஸ்தீன மக்களுக்கான அரபுலக மற்றும் முஸ்லிம்கள் இன்னும் முஸ்லிம் அல்லாத மக்களின் சாதகமான வெளிப்படையான மற்றும் பரவலான ஆதரவு, பலஸ்தீன மக்கள் விடுதலை பெற வேண்டும் என்பதற்கான அவர்களின் கோஷங்கள், யுத்த களத்தில் பலஸ்தீனர்கள் நடத்தி வருகின்ற போராட்டங்கள் என்பன அரபுலகம் அண்மையில் பின்பற்றத் தொடங்கிய இஸ்ரேலுடனான இயல்பான உறவு என்ற கோட்பாடு சில அரசுகளினதும் ஆட்சியாளர்களினதும் நன்மை கருதி செயற்கையாக விதைக்கப்பட்டவை என்பதும் இப்போது நிரூபணமாகி உள்ளது.
நவீன மற்றும் தற்கால அரபு வரலாற்று பேராசிரியர் கலாநிதி முஹ்ஸின் எம் சாலேஹ் ஹமாஸின் அல் அக்ஸா வெள்ளம் தாக்குதல் பற்றி இப்படிக் குறிப்பிடுகின்றார் காஸாவில் இஸ்ரேலிய குடியிருப்புக்கள் மற்றும் இராணுவத் தளங்கள் மீதான தாக்குதல்கள் என்பன 1948ல் இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்டது.
முதல் அதற்கு முன்னொருபோதும் இல்லாத மூலோபாய தாக்குதல்களாகும். ஒரு சில மணி நேரத்தில் ஹமாஸ் படையினர் 20 குடியிருப்புக்களையும், காவல் நிலையங்களையும், 11 இராணுவ நிலைகளையும் கைப்பற்றினர்.
இதில் காஸா பிரிவுக்கான தலைமையகமும் அடங்கும். இங்கிருந்து தான் 1948குப் பிந்திய காலகட்டங்களில் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இருந்துதான், சகல யுத்தங்களும் தாக்குதல்களும் நெறிப்படுத்தப்பட்டுள்ளன.
1948 முதல் இஸ்ரேல் பலஸ்தீனர்களுடனும் அரபு நாடுகளின் இராணுவங்களுடனும் மோதிய எல்லா சந்தர்ப்பங்களிலும் பார்க்க இஸ்ரேல் இன்று தான் ஆகக் கூடுதலான உயிர் இழப்புக்களைச் சந்தித்துள்ளது.
1967 யுத்தத்தில் கொல்லப்பட்ட இஸ்ரேலியர்களின் எண்ணிக்கை 750ஐ விடவும் குறைவானதே. 1982ல் லெபனான் மீதான மூன்று மாத கால ஆக்கிரமிப்பின் போது 650க்கும் குறைவான இஸ்ரேலியர்களே கொல்லப்பட்டனர்.
2006 ஜுலை யுத்தத்தில் 104 இஸ்ரேலியர்கள் மட்டுமே உயிர் இழந்தனர். 1973 அக்டோபர்
யுத்தத்தில் இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலில் எகிப்திய மற்றும் சிரியா இராணுவங்களும் பங்கேற்றன. அந்த யுத்தத்தில் மட்டும் தான் இஸ்ரேல் தரப்பில் 2200 க்கும் 2500க்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான இஸ்ரேல் படைவீரர்கள் கொல்லப்பட்டனர். இன்றைய மோதல்களில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள உயிர் இழப்பு 1450 ஆகும். காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 3000 எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும் தற்போதைய மோதல்களின் போது முன்னர் ஒருபோதும் இல்லாத வகையில் பெருமளவான இஸ்ரேலியர்கள் பலஸ்தீன போராளிகளால் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர்.
150க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களுள் பெருமளவான இஸ்ரேலிய இராணுவ உயர் அதிகாரிகளும் காணப்படுகின்றனர். மிகப் பெரிய அளவிலான மூலோபாய இராணுவ ஆச்சரியங்களையும் இங்கே காண முடிகின்றது.
இஸ்ரேலின் இராணுவ வரலாற்றில் மிகப் பெரிய அளவிலான தோல்விகளையும் இங்கே அவதானின் முடிகின்றது. இவை இஸ்ரேலிய அரசாங்கத்துக்குள் மிகத் தீவிரமானதோர் குழப்ப நிலையையும் அவமானகரமான ஒரு நிலையையும் ஏற்படுத்தி உள்ளன.
இந்த யுத்தத்தின் முதலாவது மூலோபாய தாக்கம் தடுப்பு நடவடிக்கைகள், முன்கூட்டிய எச்சரிக்கைகள், விரைவான இராணுவ முடிவுகள் அல்லது தீர்வுகள், பாதுகாப்புக் கொள்கை என்பனவற்றின் அடிப்படையிலான இஸ்ரேலின் ‘தேசிய பாதுகாப்பு தத்துவம்’ தோல்வி அடைந்துள்ளமையாகும். இவை எல்லாமே இன்று தோற்றுப் போய் விட்டன.
இஸ்ரேலிய கோட்பாடுகளின் அடிப்படையே பாதுகாப்பாகும். இஸ்ரேலிய கட்டமைப்பின் முக்கிய அடித்தளமும் இதுவேயாகும்.
உலக மக்களுக்கு இஸ்ரேலுக்குள் ஒரு பாதுகாப்பான சொர்க்கத்தை ஏற்படுத்துவது, தன்னை சுற்றி உள்ள மூலோபாய சுற்று வட்டாரத்துக்குள் இருக்கின்ற எல்லா அதிகாரங்களையும் இராணுவங்களையும் தன்னால் அடக்க முடியும் என்பன போன்ற மாயைகளும் இங்கே முறியடிக்கப்பட்டுள்ளன.
சியோனிஸத்தின் மூல சித்தாந்த உள்ளடக்கமே இன்று தரைமட்டமாகி உள்ளது. ‘வாக்களிக்கப்பட்ட பூமி’ யை உருவாக்கும் இஸ்ரேலின் மொத்த முயற்சியும் இப்போது ஆட்டம் கண்டுள்ளது.
இஸ்ரேல் தனது முயற்சிகளில் வலுவிழந்துள்ள நிலையில் அங்கு வந்து குடியேறிய சியோனிஸ யூதர்கள் இப்போது தங்களது அசல் பிரஜா உரிமை உள்ள நாடுகளை நோக்கி மீண்டும் ஓடத் தொடங்கி உள்ளனர்.
இந்த யுத்தத்தின் இரண்டாவது மூலோபாய தாக்கம் அல் அக்ஸா பள்ளிவாசல் மற்றும் ஜெரூஸலம் நகர் என்பன பலஸ்தீன, அரபு மற்றும் முஸ்லிம் மக்களின் மனச்சாட்சிகளில் மையப்படுத்தப்பட்டுள்ளமையாகும்.
இவ்விரண்டையும் இந்த எல்லா மக்களும் மிகவும் நேசிக்கின்றனர். அவை அவர்களின் உத்வேகத்துக்கான ஆதாரமாகவும் காணப்படுகின்றன.
முஸ்லிம் சகோதரத்துவ படைகளை ஓரணியில் திரட்டி ஒற்றுமைபடுத்தி சரியான திசையில் நிiநிறுத்தும் மையங்களாகவும் அவை அமைந்துள்ளன. ஜெரூஸலம் மீதான இன்றைய இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு, அல்அகஸா பள்ளிவாசலை யூத மயப்படுத்தும் அதன் முயற்சிகள் என்பன கடந்த தசாப்தங்களில் சியோனிஸ திட்டங்களுக்கு எதிரான மக்கள் எழுச்சிகளுக்கும் மோதல்களின் வெடிப்புக்களுக்கும் காரணங்களாக அமைந்துள்ளன. ஹமாஸின் இன்றைய இராணுவ நடவடிக்கைகளுக்கு அல் அக்ஸா வெள்ளம் என்று
பெயரிடவும் மூல காரணமாக அமைந்தவை இந்த விடயங்களேயாகும்.
மூன்றாவது மூலோபாய தாக்கமாக எதிர்த்து போராடும் திட்டத்தின் செயற்பாட்டு
ரீதியான நிரூபணத்தை குறிப்பிடலாம். பலஸ்தீன மக்களின் உரிமைகள் என்ற
விடயத்தை உண்மையான தாக்கம் மிக்க கருவியாக்கி ஆக்கிரமிப்பை தோற்கடிப்பது என்பது இங்கே பிரதான இடம் பிடிக்கின்றது.
இந்த தாக்குதல் திட்டமானது ஹமாஸின் விரிவான மற்றும் நுணுக்கமான தயார்
படுத்தல்களின் உச்ச கட்டமாகும். மேலும் இதுவே போராட்ட சக்திகளின்
கரங்களில் அதிகாரத்தை மையப்படுத்துவதறகான உச்ச கட்ட திட்டமும் ஆகும்.
இதனால் தான் அவர்கள் மிகவும் தரம் வாய்ந்த இராணுவ ரீதியான பாய்ச்சலில்
இறங்கி உள்ளனர். பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான அம்சங்களிலும் அவர்கள்
ஆச்சரியத்தக்க செயற்பாடுகளை வெளிப்படுத்தி உள்ளனர்.
இவை கடந்த நான்கு பிரதான யுத்தங்களோடும் ஒப்பிடுகையில் மிகவும் உச்ச கட்ட நிலையாகும். சமாதான செயற்பாடுகள் முறிவடைந்ததன் தொடர் விளைவாகவும் பலஸ்தீன
விடுதலை அமைப்பு, பலஸ்தீன அதிகார சபை என்பன ஒஸ்லோ உடன்படிக்கையைப் பின்பற்றி 1967ல் இஸ்ரேல் ஆக்கிரமித்த பகுதிகளில் பலஸ்தீன மக்களுக்கான சுதந்திர தேசம் ஒன்றை நிறுவதில் தோல்வி கண்டுள்ள பின்னணியிலுமே இந்த நடவடிக்கை தொடங்கி உள்ளது. அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த இஸ்ரேலிய அரசுகள் சமாதான செயற்பாடுகளை அலட்சியம் செய்து வந்துள்ளன.
யூதமயமாக்கலின் விரிவாக்கம், குடியேற்றத் திட்டங்களின் விரிவாக்கம், பலஸ்தீன அதிகார சபையை பலஸ்தீன மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு அமைப்பாக அன்றி தனது நலன் சார்ந்த ஒரு அமைப்பாக மாற்றிய இஸ்ரேலின் தந்திரம் என்பனவும் இங்கே முக்கிய இடம் பிடிக்கின்றன.
நான்காவது மூலோபாய தாக்கமாக பலஸ்தீனர்களை அடிபணியச் செய்து அடிமைகளாக வைத்திருக்கலாம் என்ற இஸ்ரேலிய திட்டமும் தோல்வி கண்டுள்ளது எனக் கூறலாம்.
ஆரம்பத்தில் 30 வருட கால இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதன் பின்னர் சுமார் 75 வருட கால இஸ்ரேலிய உருவாக்கத்தின் பின்னரான நிலையிலும் பலஸ்தீன மக்களின் எழுச்சிப் போராட்டமான ‘இன்திபாதா’ நிறுத்தப்படவே இல்லை. மாறாக அவை அவ்வப்போது தணிந்து தணிந்து பாய்ந்த வண்ணமே இருந்தன.
எல்லா வகையான அடக்குமுறைகளும், இடப்பெயர்வுகளும், அழிவுகளும், துன்பங்களும் பலஸ்தீன மக்களை சோர்வடையச் செய்யவும் இல்லை. தடுக்கவும் இல்லை. ஓவ்வொரு தடவையும் அந்த மக்களை நாம் அடக்கிவிட்டோம் என்று இஸ்ரேல் எண்ணிய வேளைகளில் ஒரு இன்திபாதா வெடித்திருக்கின்றது. அது மீண்டும் அவர்களை ஆரம்ப நிலைக்கு கொண்டு வந்தது.
1987 முதல் 1993 வரையான முதலாவது இன்திபாதா, 2000 முதல் 2005 வரையான அல்அக்ஸா இன்திபாதா, காஸா பிரதேச மோதல்கள், ஜெரூஸலம் இன்திபாதா என இன்னும் பல நிகழ்வுகளை இங்கே குறிப்பிடலாம்.
ஆகவே இஸ்ரேலிய பத்திரிகையான ஹாரட்ஸ்; “வரலாற்றில் நாம் மிகவும்
கடினமான ஒரு மக்கள் பிரிவை எதிர் கொண்டுள்ளோம்.
அவர்களை அங்கீகரித்து ஆக்கிரமிப்புக்கு தீர்வு காண்பதை விட வேறு தெரிவுகள் எதுவுமே இருக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளது ஒன்றும் ஆச்சரியமானதும் அல்ல. பலஸ்தீனம்
உலகத்தின் மீதான அதன் போராட்ட மரபணுவை மீண்டும் ஒரு தடவை அமுல்
செய்துள்ளது.
ஐந்தாவது மூலோபாய தாக்கம் இந்தப் பிராந்தியத்தின் ‘பொலிஸ்காரனாக’ வலம்
வர வேண்டும் என்ற இஸ்ரேலின் கனவுகளும் முயற்சிகளும் தோல்வி கண்டுள்ளன.
இந்தப் பிராந்தியத்தின் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு இஸ்ரேலில் இனிமேலும்
தங்கியிருக்க முடியாது என்ற நிலை மேற்குலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்தப் பிராந்திய நாடுகளுக்கு அவர்களது எதிரிகளோடு பிரச்சினைகளும் முரண்பாடுகளும் ஏற்படுகின்ற போது இஸ்ரேலின் ஊடாக அவற்றுக்கு தீர்வு காணலாம அல்லது அடக்கி விடலாம் என்ற மேற்குலக எண்ணங்கள் இப்போது தவிடுபொடியாக்கப்பட்டுள்ளன. இனிமேலும் இஸ்ரேல் அந்தளவு பலம் மிக்க ஒரு சக்தி அல்ல.
தனது சொந்தப் பாதுகாப்பிலேயே கோட்டைவிட்ட ஒரு நாடு தான் இஸ்ரேல் என்பதுதான் இன்று அதன் நிலைமை. ஹமாஸ் இயக்கத்தின் இந்த அல் அக்ஸா வெள்ளம் தாக்குதலின் மூலம் இஸ்ரேல் ஒரு போலியான பிம்பம்; என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் அதை மீண்டும் சரி செய்வதோ அல்லது கட்டி எழுப்புவதோ சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல.
இன்றைய தாக்குதல்கள் மூலம் ஏற்பட்டுள்ள ஆறாவது மூலோபாய தாக்கம் பலஸ்தீனம் என்ற விடயத்தை பக்கவாட்டில் போட்டு மூடி வைத்துவிட்டு சுற்றியிருக்கும் அரபுலக மற்றும் முஸ்லிம் நாடுகளுடன் இயல்பு நிலையை ஏற்படுத்திக் கொள்ளலாம் என்ற எண்ணங்களும் திட்டங்களும் இங்கே தோல்வி கண்டுள்ளன.
அரபுலக மற்றும் முஸ்லிம் சுற்றுப்புறச் சூழலில் இருந்து பலஸ்தீனத்தை ஓரம் கட்டி விடலாம் அல்லது தனிமைப்படுத்தி விடலாம், பலஸ்தீனம் என்ற ஆவணத்தை ஓரமாக்கிவிட்டு சியோனிஸ தூர நோக்கை அப்படியே இந்தப் பிராந்தியத்தில் அமுல் செய்து விடலாம் என்ற
எண்ணங்களுக்கும் இப்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதத்தில் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெத்தன்யாஹு ஐக்கிய
நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையின் சாராம்சமும் இதுவாகவே
காணப்பட்டது.
இறுதியாக அல்அக்ஸா வெள்ளம் தாக்குதல் பலஸ்தீன விவகாரத்தை மேலோங்கச் செய்யும் வகையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
பலஸ்தீன போராட்ட வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகப் பதியப்படும். 2023 அக்டோபர் 7 தாக்குதலின் பின் ஏற்படப் போகின்ற விளைவுகள் இதற்கு முன் ஏற்பட்ட விளைவுகளை விட மாற்றங்களைக் கொண்டிருக்கும்.