இஸ்ரேல் தரைவழியாக காஸாவில் ஊடுருவுவதற்கான அவகாசம் நிலவும் நிலையில் ஹமாஸ் லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பையும் தம்முடன் இணைந்து கொள்ளுமாறு கோரியிருந்தது.
இந்நிலையில் வடக்கு இஸ்ரேலின் ஷெபா பண்ணையிலுள்ள இராணுவத் தளமொன்றின் மீது தாம் மோட்டார் தாக்குதல் நடத்தியதாக லெபனானின் ஹிஸ்புல்லாஹ் அமைப்பு உரிமை கோரியுள்ளது.
இதற்குப் பதிலடியாக தாம் லெபனான் மீது ஆர்ட்டில்லரி தாக்குதல்கள் நடத்தியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.