இஸ்ரேல்-ஹமாஸ் போர்: ஒன்றிணையும் இஸ்லாமிய நாடுகள்!

Date:

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் தீவிரமாகி வருகிறது. இந்நிலையில் தான் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் உயர்மட்டக்குழுவின் அவசர கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அடுத்தக்கட்ட பரபரப்பபு ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் அமைப்புக்கு இடையே நீண்டகாலமாக மோதல் இருக்கிறது.

கடந்த 7 ம் தேதி ‘ஹமாஸ்’ அமைப்பு இஸ்ரேல் மீது மிக கடுமையான தாக்குதலை நடத்தினர். அதிகாலையிலேய 7 ஆயிரம் ஏவுகணைகளை ஏவி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதல் இன்று 9 வது நாளாக தொடர்ந்து வருகிறது. தற்போது வரை 2 தரப்பையும் சேர்த்து 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர். 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மேலும் நாளுக்கு நாள் போர் தீவிரமாகி வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இது ஒருபுறம் இருக்க இஸ்ரேல் மற்றும் ஹமாசுக்கு ஆதரவாக பல நாடுகள் களமிறங்கி உள்ளனர். காசா பகுதியை பாதுகாக்கும் நோக்கில் பல இஸ்லாமிய நாடுகள் தெரிவித்துள்ளன. மாறாக அமெரிக்கா, இந்தியா உள்பட பல நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக உள்ளன. அமெரிக்கா தரப்பில் விமான தாங்கு போர் கப்பல் இஸ்ரேலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இஸ்ரேல், காசா இருதரப்புக்கும் ஆதரவு தெரிவித்துள்ள நாடுகளும் தொடர்ந்து கூறுவது என்னவென்றால் போரை நிறுத்த வேண்டும். பேச்சுவார்த்தை மூலம் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்கின்றனர்.

ஆனால் தற்போது வரை அது நடக்கவில்லை. மேலும் காசாவின் வடக்கு பகுதியில் தரைவழி தாக்குதலை நடத்த இஸ்ரேல் தயாராகி வருகிறது. இது நடக்கும் பட்சத்தில் போர் இன்னும் அதிகரித்து பலி எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்.

இந்நிலையில் தான் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் அதிகரித்து வரும் சூழலும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு சார்பில் ஆலோசனைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்துக்கு சவூதி அரேபியா தலைமை தாங்கி நடத்த உள்ளது.

இந்த கூட்டம் வரும் புதன்கிழமை ஜித்தாவில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க வர வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இணையதளத்தில், ‛‛சவூதி அரேபியாவின் அழைப்பை தொடர்ந்து காசா மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் அதிகரித்து வரும் ராணுவ பதற்றம் மற்றும் அங்குள்ள மோசமான நிலைகளை சரிசெய்ய நிர்வாக குழுவின் அவசர கூட்டம் அமைச்சர்கள் மட்டத்தில் நடைபெற உள்ளது.

பொதுமக்களின் வாழ்க்கை மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைக்காக இந்த கூட்டம் நடத்தப்பட உள்ளது” என்றார்.

இந்த கூட்டத்தில் காசா பகுதியின் பாதுகாப்பு, அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் காசா மக்களுக்கான உதவி, தற்போதைய போர் நிலை, போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தற்போதைய சூழலில் சவூதி அரேபியா-இஸ்ரேல் இடையே சுமூகமான உறவு இல்லை. இருநாடுகள் இடையேயான பேச்சுவார்த்தை தடைப்பட்டுள்ள நிலையில் சவூதி அரேபியா இந்த கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

மேலும் பல நாடுகள் இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரித்தது இல்லை. சில இஸ்லாமிய நாடுகள் மட்டுமே சுமூகமான உறவு வைத்துள்ளன. மேலும் தற்போதைய சூழலில் போர் தொடங்கியது முதல் சவூதி அரேபியா தொடர்ந்து இஸ்ரேலை கடும் சொற்களால் விமர்சனம் செய்து வருகிறது. இ

தனால் இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவு எப்படி இருக்கும்? இது எந்த வகையான தாக்கத்தை இஸ்ரேல்-காசா மோதலில் ஏற்படுத்தும்? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தபால் ஊழியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பு

இலங்கை தபால் ஊழியர்கள் நாளை (17) வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர். தபால்...

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...