இஸ்ரேல் – ஹமாஸ் போராளிகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரின் ஏவுகணை தாக்குதலால் இஸ்ரேலின் பல்வேறு இடங்கள், கட்டிடங்கள் சுக்குநூறாகின, ஏராளமானோர் உயிரிழந்தனர்.
ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் பலஸ்தீனத்தின் மீது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.
6 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்துவதற்கு இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த மசூதிக்கு முகமது நபி வந்துள்ளதாக நம்பிக்கை உள்ள நிலையில் கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள அல் அக்சா மசூதி மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்துவதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.