ஈஸ்டர் தாக்குதல்: இலங்கை கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதிக்கு கடிதம்!

Date:

இலங்கையின் கத்தோலிக்க திருச்சபை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு  கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முன்னைய விசாரணைகளில் காணக்கூடிய சில குறைபாடுகளை களைவதற்காக உள்ளுர் விசாரணைக்கு அந்த கடிதத்தின் ஊடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க ஆயர்கள் பேரவையினால் நியமிக்கப்பட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கான, நீதிக்கான தேசிய கத்தோலிக்கக் குழுவின் உறுப்பினர்களான கர்தினால் மெல்கம் ரஞ்சித் உட்பட பல ஆயர்கள் கையெழுத்திட்ட இந்த கடிதத்தில், முந்தைய விசாரணைகளில் முக்கியமான பிரச்சினைகளை புறக்கணித்ததாகக் கூறப்பட்டுள்ளது.

இராணுவ புலனாய்வு இயக்குநரகம் மற்றும் அரச புலனாய்வு சேவை ஆகியவை சஹ்ரானுடன் நெருங்கிய உறவுகளை கொண்டிருந்தன என்பது தெளிவாகிறது.

இந்த விசாரணைகளைத் தடுக்கவும் சூழ்ச்சிகரமான செயற்பாடுகளை முன்னெடுக்கவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

இதேவேளை ‘செனல் 4’ காணொளியில் கூறப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறும் இலங்கை கத்தோலிக்க திருச்சபை குழு கோரியுள்ளது.

இந்த விசாரணையை வெளிநாட்டு பார்வையாளர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் அந்த குழு வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!

நேபாள நாடாளுமன்றத் தோ்தலில், இளைஞா்களின் ஆதரவு பெற்ற ‘ராப்’ பாடகரும், முன்னாள்...

நாட்டில் இன்று வறட்சியான வானிலை!

நாட்டில் இன்று (07) வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்...

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...