ஓரினசேர்க்கை திருமணத்துக்காக சட்டம் இயற்ற முடியாது: இந்திய உச்சநீதிமன்றம்

Date:

இந்தியாவில் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த வேளையில் இந்த நீதிமன்றம் ஓரின திருமணத்துக்காக நீதிமன்றம் சட்டம் இயற்ற முடியாது என்பது உட்பட 10 முக்கிய விளக்கங்களை உச்சநீதிமன்றம் சுட்டிக்காட்டியது.

இந்தியாவில் ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ள மட்டுமே சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது. மாறாக ஆணும்-ஆணும், பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்வது என்பதற்கு சட்டப்பூர்வ அனுமதி இல்லை.

இத்தகைய தன்பாலின ஈர்ப்பாளர்கள் அல்லது ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்துக்கு இந்தியாவில் அனுமதி கூடாது. இது இந்திய காலசாரத்துக்கு எதிரானது என பல்வேறு மதம்சார்ந்த அமைப்புகளும், மத்திய அரசும் கூறி வருகிறது.

இந்நிலையில் தான் ஓரின திருமணத்துக்கு அனுமதி வழங்க வேண்டும். இதற்கு சிறப்பு சட்டத்திருத்தத்தின் கீழ் அங்கீகாரம் வழங்க வேண்டும் என ஓரின சேர்க்கையாளர்கள், LGBTQ ஆர்வலர்கள் தரப்பில் உச்சநீதிமன்றங்களில் மனுக்கள் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது.

வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. 5 நீதிபதிகளில் 4 நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர்.

அதில் ஓரின திருமணம் குறித்த நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என நீதிமன்றம் தெரிவித்தது. இந்நிலையில் தான் ஓரின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் கூறிய 10 முக்கிய  விடயங்கள் விடயங்கள் வருமாறு,

தன்பால் ஈர்ப்பு என்பது சாதி வர்க்கம் பார்த்து வருவது இல்லை. மேலும் இது நகர்புறத்துக்கானது எனவும், வசதி படைத்தவர்களுக்கானது என்ற கருத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஏனென்றால் தன்பால் ஈர்ப்பு எனும் வினோத நடவடிக்கை என்பது நகர்ப்புறத்தில் இருப்பவர்களும், வசதி படைத்தவர்களிடம் மட்டுமே இருப்பது என கருதுவதை ஏற்க முடியாது.

2வது மக்களின் அடிப்படை உரிமைகளை காக்கும் உரிமை நீதிமன்றத்துக்கும், நீதிபதிகளுக்கும் உள்ளது. இருப்பினும் சட்டத்தை உருவாக்கும் அதிகாரம் என்பது நீதிமன்றத்துக்கு இல்லை.

குறிப்பிட்ட சட்டங்களில் திருத்தங்கள் செய்யவும் முடியாது. இது அனைத்தும் நாடாளுமன்றம் சார்ந்த விஷயமாகும். நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றி, சட்டத்திருத்தம் செய்தால் அதனை நிலைநிறுத்தும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளது.

3வது  சிறப்பு திருமணச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வர வேண்டுமா? என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் சட்டம் இயற்றும் அதிகாரத்துக்குள் நுழையாமல் நீதிமன்றம் கவனமாக இருக்க வேண்டும்.

4வது  திருமண சீர்திருத்தங்கள் என்பது சட்ட திருத்தங்கள் மூலமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும் நீதிமன்றம் திருமணம் என்பதை ஒரு நிலையான அல்லது மாறாத ஒரு சடங்கு என்று கூறுவது தவறானது என தெரிவித்தது.

5வது ஒவ்வொருவரின் மீதான அன்பும், உறவும் தான் நம்மை மனிதர்களாக உணர வைக்கிறது. இதற்கு உள்ளார்ந்த ஆத்மார்த்தமான தேவை ஒன்று உள்ளது. நமது உணர்ச்சிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதும், வெளிக்காட்டிக்கொள்வதும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. இருப்பினும் இதில் பல வடிவங்கள் உள்ளன.

6வது  குடும்பமாக வாழ்வதும், சமூகத்தில் குடும்பங்கள் உருவாகுவது மனித பண்பின் மிகவும் முக்கியமான பகுதியாகும். இது தான் சுயமான வளர்ச்சிக்கும் உதவவும் செய்கிறது.

7 வது  ஒவ்வொருவரும் வாழ்க்கை துணையை தேர்வு செய்வது அவர்களின் சுயவிருப்பமாகும். பலர் இதனை தங்களது வாழ்வின் மிக முக்கியமான முடிவாக கருதலாம். இந்த உரிமை என்பது 21வது பிரிவின் கீழ் வாழும் உரிமை மற்றும் சுதந்திர வாழ்க்கை உரிமைக்கு உட்பட்டதாக உள்ளது.

8 வது  தன்பாலின ஈர்ப்பாளர்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் தங்களின் வாழ்க்கை துணையை தார்மீக உரிமையின் அடிப்படையில் தேர்வு செய்ய உரிமை உண்டு.

ஏனென்றால் சுதந்திரம் என்பதன் பொருள் என்பது ஒருவர் தங்களின் விருப்பத்தின் படி செயல்படுவதை உறுதி செய்வதாகும்.

9வது  தன்பாலின ஈர்ப்பாளர்களிடம் பாகுபாடு காட்ட முடியாது என்பதை இந்த நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. தன்பாலின ஜோடிகளுக்களின் விருப்ப வாழ்வை வாழ அனுமதிக்க மறுப்பது என்பது அவர்களின் அடிப்படை உரிமையை மீறும் செயலாகும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

10வது  பாலினத்தின் அடிப்படையில் ஒருவருக்கு எதிராக பாகுபாடு காட்டக்கூடாது என்பது தான் சமத்துவம். தன் பாலின இணையர்களால் குழந்தைகளை சரியாக வளர்க்க முடியாது என கூறுவதற்கு ஆதாரங்கள் எதுவும் இல்லை. குழந்தை திருமணங்கள் முன்பு ஏற்கப்பட்டன.

இப்போது அது ஏற்கப்படவில்லை. குழந்தை திருமணம் என்பது சட்ட விரோதமானது. இதனால் திருமணம் என்பது ஒவ்வொரு காலத்திலும் மாறக்கூடியது.

இருப்பினும் சிறப்பு திருமண சட்டத்தை ஏற்க வேண்டுமா என்பதை நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய முடியும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

Popular

More like this
Related

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...

பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு விஹார...

இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக அமைச்சர் குமார ஜயகொடி தெரிவு

பத்தாவது பாராளுமன்றத்தின் இலங்கை – சவூதி அரேபிய பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின்...