கடும் நிபந்தணையின் அடிப்படையில் இந்திக்க தொட்டவத்தவுக்கு பிணை!

Date:

முஹம்மத் நபி (ஸல்) மற்றும் இஸ்லாம் மார்க்கம் சம்மந்தமாக பொய்யான கருத்துக்களை கூறி மிகவும் கீழ்த்தரமான இழிவான கருத்துக்களை யூடூப் தளத்தில் பதிவிட்டமைகைகாக இந்திக்க தொட்டவத்தவை கடந்த ஒக்டோபர் மாதம் 6ம் திகதி கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது 14 நாட்கள் விளக்கமறியளில் வைக்குமாரு மாளிகாகந்த நீதவான் கட்டளையிட்டிருந்தார்..

இன்று அவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது கணனி குற்றத்தடுப்பு பிரிவினர் இந்தத் தவறை ICCPR சட்டத்தின் கீழ் பதிவு செய்வதா,இல்லையா என சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இன்னும் ஆலோசணை கிடைக்கவில்லையென்றும்,அதுவரையில் சந்தேக நபரை விளக்கமறியளில் வைக்குமாரும் நீதவானிடம் சமர்ப்பணம் செய்தனர்.

அதன் பின் இவ் வழக்கில் முஸ்லிம் சமூகத்தின் முறைப்பாட்டாளர்கள் சார்பாக ஆஜராகிய சிரேஷ்ட சட்டதரணி சிராஸ் நூர்தீன் , சிரேஷ்ட சட்டதரணிகளான. மஹாஸ் யூசுப், முஹம்மத் அன்வர், மற்றும் பசான் வீரசிங்க ,எம்.கே.எம்.பர்ஸான் ஆகியோர் ஆஜராகினர் தமது சமர்ப்பணத்தை கௌரவ நீதவான் லோச்சனா விக்கரமசிங்ஹ அவர்கள் முன்னிலையில் எடுத்துரைத்தனர். இதன்போது” இந்திக்க தொட்டவத்தைக்கு பிணை வழங்குவதை நாம் எதிர்க்கவில்லை.ஆனால் இவர் எல்லா மதங்களையும் மிகவும் கேவளமாக இழிவுபடுத்தக்கூடியவர் எனக்கூறி ,அது சம்மந்தமான ஆதரங்களை முன்வைத்து இவருக்கு சாதரணமாக பிணைவழங்காமல் நிபந்தணையுடன் கூடிய பிணை வழங்க வேண்டும் என்றும் இனி இவர் இது போன்று மதத்தை நிந்திக்கும் வகையில் பேசினால் அவரது பிணை ரத்து செய்ப்பட்டு கைது செய்யப்பட வேண்டும் எனவும் அவர் தான் கூறிய வார்த்தைகளுக்காக தனது வருத்தத்தை தெரிவிக்க வேண்டுமெனவும் குறிப்பிட்டு இஸ்லாத்தில் நபியவர்கள் எதிரிகளுடன் எவ்வாறு நடந்து கொண்டார்கள்,எவ்வாரு எதிரிகளுக்கு மன்னிப்பளித்தார்கள் என்பது சம்பந்தமான 172 சம்பவங்களை சமர்ப்பணம் செய்து அதில் பல சந்தர்ப்பங்களையும் நீதவான் முன்னிலையில் சுட்டிகாட்டினர்.

மேலும் இவ்வாறான பேச்சுக்கள் மூலம் மக்கள் தூண்டப்பட்டு தவறான முடிவுகளை எடுப்பார்கள் என்றும் இது போன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் மக்களுக்கு நாட்டில் சட்ட ஒழுங்கு மீதுள்ள நம்பிக்கை இல்லாது போய்விடும் என்றும் சுட்டிக்காட்டினர்.

அதன் பின் இந்திக்க தொட்டவத்த சார்பில் சிரேஷ்ட சட்டதரணி உபுல் குமாரப்பெரும, சுசன்த தொடவத்த உட்பட 4 சட்டதரணிகள் முஸ்லிம் முறைப்பாட்டாளர்கள் தரப்பு சட்டத்தரணிகள் குலாம் முன்வைத்த வாதத்தை தாம் ஏற்பதாகவும், ஏற்பட்ட தவறுக்காக அனைவரிடமும் தமது வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டனர்.

மேலும் இந்திக்க தொட்டவத்தவுக்கு ஐந்து புலன்களும் இல்லை என்றும் நான்கு புலன்களை மட்டுமே யுடையவரென்றும் அதனால் அவரை அறியாமல் சில விடயங்களை பேசி விடுவார் என்றும் இந்திக்க தொட்டவத்தவின் சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்..

இருபக்க வாத விவாதங்களையும் செவிமடுத்த கௌரவ நீதவான் லோச்சனா வீரசிங்க அவர்கள் முஸ்லிம் சமூக முறைப்பாட்டாளர்கள் சார்பான சட்டதரணிகள் பாராட்டத்தக்க முறையில் நடந்து கொண்டனர் என்று சுட்டிக்காட்டியதோடு இந்திக்க தொட்டவத்த ஒரு புலன் குறைந்தவர் என்ற விடயம் ஒருபோதும் அவருக்கு மன்னிப்பாக அமைய மாட்டாது என்றும் அவருக்கு அவ்வாறான பிரச்சினை இருந்தால் அதாவது தன்னை கட்டுப்படுத்தி பேச முடியாவிட்டால் அவர் இவ்வாறான மதம்சார்ந்த விடயங்களை பொது வெளியில் பேசாமல் தவிர்க்க வேண்டும் என்றும் ஒரு தனிநபரின் செயற்பாட்டுக்காக முழு நாடும் பிரச்சினையை எதிர் நோக்கவிட முடியாது என்றும் குறிப்பிட்டார். மேலும் மதம் சம்மந்தமான வாத விவாதங்கள் செய்வதென்றாலும் கெளரவமான முறையில் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

மேலும் இந்திக்க தொட்டவத்த இனிமேல் இவ்வாறான கீழ்த்தரமான, இழிவான பேச்சுக்களை பொது வெளியில் பேசக்கூடாது என்றும் எச்சந்தர்ப்பத்திலேனும் அவ்வாரு பேசினால் பிணை நிபந்தனையை மீறியதன் அடிப்படையில் மீண்டும் கைது செய்யப்படுவாரென்றும் கடுமையான நிபந்தனையுடன் கூடிய பிணையை நீதவான் வழங்கினார். அடுத்த வழக்கு ஜனவரி மாதம் 19ம் திகதி நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...