சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் ஆரம்பம்!

Date:

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் இன்று மொரோக்கோவின் மராகேச்சில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த கூட்டத்தில் இலங்கை சார்பில், நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க, நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, மற்றும் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் பங்கேற்கவுள்ளனர்.

2024ஆம் ஆண்டு இலங்கை பொருளாதார ஸ்திரத்தன்மையில் இருந்து பொருளாதார வளர்ச்சி நோக்கி நகர்வதை உறுதி செய்வதற்காக சர்வதேச நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பு இதுவாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த மாநாட்டில் உலகம் ஏற்றுக்கொண்ட நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்கள் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ள சர்வதேச நம்பிக்கையை இலங்கையால் மேலும் உறுதிப்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 15ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த மாநாட்டில் பல நாடுகளின் தலைவர்கள், நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...