சர்வதேச விசாரணைக்கு இடமில்லை; மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்தார் ஜனாதிபதி

Date:

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் உள்ளிட்ட எந்தவொரு விடயம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் சர்வதேச விசாரணையை மேற்கொள்ளாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் Deutsche Welle ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலின் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அத்துடன், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் பிரித்தானிய ஊடகமான செனல் 4 வெளியிட்ட ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பிலும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.

குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் ஆராய்வதற்கு நீதிபதி, முன்னாள் விமானப்படை தளபதி மற்றும் பிரபல சட்டத்தரணி ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த குழுவின் பலம் தொடர்பில் சந்தேகம் எழுப்பியதுடன், இலங்கை கத்தோலிக்க திருச்சபை சுயாதீன விசாரணை கோருவது குறித்து ஊடகவியலாளர் வினவியபோது ஜனாதிபதி அவரை வசைபாடியதுடன், இந்த கேள்வியினை என்னிடம் கேட்பதற்கு நீங்கள் யார் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், மேற்குலக நாடுகள் இலங்கையை மூன்றாம் தர நாடு போன்று கருதுவதாகவும், அந்த அடிப்படையிலே ஊடகவியலாளர் கேள்வி எழுப்புவதாகவும் ஜனாதிபதி குற்றம்சாட்டியுள்ளார்.

இதனிடையே, Deutsche Welle ஊடகத்தை பிரதிநிதித்துவப்படுத்திய ஊடகவியலாளரின் கேள்விகளுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் இடையூறு விளைவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேர்காணலில் இருந்து வெளியேறுவதாகவும் அறிவித்ததனையும் அவதானிக்க முடிந்தது.

இதேவேளை இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்தை அறிக்கையை தமது அரசாங்கம் நிராகரிப்பதாக ஜனாதிபதி ரணில்  தெரிவித்துள்ளார்

அத்துடன், இலங்கையில் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகக் கூறப்படும் விடயத்தை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

மூலம்: ஒருவன்

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...