டெங்கு காய்ச்சல் தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

Date:

இலங்கையில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் 8 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 684 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் எனவும், கடந்த வாரத்தில் நோயாளர்களின் எண்ணிக்கை 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பாதிக்கப்பட்டவர்களில் 48.2 வீதமானோர் மேல் மாகாணத்தில் பதிவாகியுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 146 டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பதிவாகியுள்ளனர்.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 65 ஆயிரத்து 479 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடித்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவும், உடனடியாக வைத்தியரை நாடுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையிலுள்ள அமெரிக்கர்களுக்குத் தூதரகம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய சூழ்நிலைக்கு மத்தியில், புதிய பாதுகாப்புத் தகவல்களைப்...

இலங்கை எடுத்துள்ள தீர்மானம் ஆபத்தானது, ஆனால் துணிச்சலானது!

ஈரானுக்குச் சொந்தமான IRIS Bushehr கப்பல் இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதற்கும்,...

ஓமான் வாழ் இலங்கையர்களின் நலன் மற்றும் பாதுகாப்பு: ஓமான் வெளிவிவகார அமைச்சருடன் விஜித ஹேரத் கலந்துரையாடல்!

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஓமான் வெளிவிவகார அமைச்சர்...

ஈரானிய வீரர்களை மீட்டது இலங்கையின் சிறந்த வெளியுறவுக் கொள்கையின் அடையாளம்: அலி சப்ரி பாராட்டு

ஈரானிய வீரர்களை மீட்டெடுத்தமை மற்றும் அந்த கப்பலுக்கு இலங்கைக் கடற்பரப்பில் அனுமதி...