தன்னை ‘பெட்டை நாய்’ என கூறி அவமனப்படுத்தியதாக டயனா குற்றச்சாட்டு!

Date:

ஈஸ்டர் தாக்குதல் சம்பந்தமாக அண்மையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, கருத்து வெளியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தன்னை “பெட்டை நாய்” என கூறி அவமனப்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்தார்.

இன்றைய தினம்  பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை முன்வைத்து உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சியில் இருக்கும் சில பண்டாரக்களுக்கு பெண்களுடன் ஏதோ ஒரு பாக்கி உள்ளது. இதனால், இந்த பண்டார குழுவினரை திருத்தி வைத்துக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றேன்.

எனக்கு ஏற்பட்ட அவமதிப்பு சம்பந்தமாக பாராளுமன்றத்தில் ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் டயனா கமகே கூறியுள்ளார்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...