தம்மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதற்கும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது அங்கத்தவர்களை விடுவிப்பதற்கும் ஜெரூஸலத்தையும் அல் அக்ஸாவையும் மீட்டெடுப்பதற்குமாகவென ஹமாஸின் கஸ்ஸாம் படைப்பிரிவு இஸ்ரேல் மீது மேற்கொண்ட தூபான் அல் அக்ஸா தாக்குதலில் இஸ்ரேலின் நஹால் காலாட்படைப் பிரிவின் தலைவர் கேர்ணல் ஜொனதன் ஸ்டென்பேர்க் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.
காஸா எல்லைக்கருகில் வைத்து இவர் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதுவரை 26 இஸ்ரேலிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது.