பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட மனுக்களை விசாரணைக்கு உட்படுத்தாதிருக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
சபாநாயகரின் அறிவிப்பத்தை தொடர்ந்து உயர் நீதிமன்றத்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குறித்த சட்டமூலத்தினை நீதிமன்றத்தினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என ஜயந்த ஜயசூரிய தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழு அறிவித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹேரத் மற்றும் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோரால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.