நேற்று டீசல் விலை அதிகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் 5 வீதத்தினால் அதிகரிக்கப்பட வேண்டுமென அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் தெரிவித்துள்ளார்.
இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலையினை அதிகரித்தது.
இதன்படி, 92 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 4 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 365 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 95 ஒக்டேன் பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 3 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு புதிய விலை 420 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், புதிய விலை 351 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.