தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு தேசிய நூலகத்தின் இலவச அங்கத்துவம்!

Date:

தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு கொழும்பு தேசிய நூலகம் இலவச அங்கத்துவத்தை வழங்கி வருகிறது.

ஒரு வருட காலத்துக்கான இந்த அங்கத்துவம் இன்று முதல் (02) இம்மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பிரிவில் வழங்கப்படுகிறது.

பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவர்களும் 10 – 13 ஆம் தரத்திலான பாடசாலை மாணவர்களும் இந்த அங்கத்துவத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அங்கத்துவ அட்டைக்காக மட்டும் 200 ரூபா அறவிடப்படும்.

தேசிய நூலகம் பெரும்பாலும் ஆய்வு முயற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு பெரிதளவில் உபயோகமாகிறது.

1976 இலிருந்து இன்று வரை வெளியாகிய பத்திரிகைகள், சஞ்சிகைகள், அரச வெளியீடுகள், ஆய்வுகளுக்காக சமர்ப்பிக்கப்பட்ட கட்டுரைகள் எனப் பல அச்சுப் பிரதிகளையும் அங்கத்தவர்கள் இங்கு பார்வையிட முடியும். திகதிவாரியாகவும் தலைப்பு வாரியாகவும் கூட தாம் உசாவுகின்ற விடயங்களைப் பெற்றுக் கொள்ள முடியும். மூன்று மொழிகளிலும் வெளிவந்த பிரசுரங்களை இங்கு சென்று பார்வையிட முடியும்.

Popular

More like this
Related

இலங்கையில் TIN பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம்...

நாட்டின் பல பகுதிகளில் அவ்வப்போது மழை

மேல் சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...

‘உலகக்கோப்பை இறுதிப்போட்டியே என்றாலும் தொழுகைதான் முக்கியம்’: செனகல் பயிற்சியாளரின் வைரல் பேச்சு!

அமெரிக்காவில் நடைபெற்று வரும் செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், செனகல் கால்பந்து அணியின்...

ஜனாதிபதி மற்றும் ‘சைனா ஹார்பர்’ தலைவர் சந்திப்பு!

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் சைனா ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்தின்...