இஸ்ரேல்-ஹமாஸ் போரினால் யூத விரோதம் அதிகரிக்கும் என்ற அச்சத்தினால் பல ஐரோப்பிய நாடுகள் பாலஸ்தீன ஆதரவு பேரணிகளுக்கு தடை விதித்துள்ளன.
பிரான்சில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் அரசாங்கம் விதித்துள்ள தடையை மீறி நேற்று முன்தினம் இரவு தலைநகர் பாரீசில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று திரண்டு பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
தடையை மீறி இடம்பெற்ற பேரணிகளை நிறுத்திய பொலிஸார் மக்களை கலைந்து செல்லும்படி எச்சரித்துள்ளனர்.
இதனை மறுத்த போராட்டக்காரர்கள் பொலிஸார் வைத்திருந்த தடுப்புகளை மீறி செல்ல முயன்றுள்ளனர்.
இதனால் பொலிஸாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் வன்முறை ஏற்பட்டுள்ளது.
போராட்டக்காரர்கள் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். பொலிஸார் மற்றும் போராட்டக்காரர்கள் இடையேயான மோதலால் பாரீஸ் உள்ளிட்ட நகரங்கள் போர்க்களம் போல மாறியுள்ளன.