கொழும்பு – புறக்கோட்டை – 2ம் குறுக்கு தெரு பகுதியிலுள்ள ஆடையகமொன்றில் பரவிய தீ தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் முதல் தொடர்ச்சியாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதன்படி, தீ பரவிய வர்த்தக நிலையம் மற்றும் அதனை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தீ விபத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதுடன், அவர்களில் 6 பேரின் நிலைமை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளதென வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களில் 11 பெண்களும் அடங்குவதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.