தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மாணவர்களை தயார் படுத்துவதற்கான மேலதிக வகுப்புகளை இன்று நள்ளிரவின் பின்னர் நடத்தவதற்கு தடை விதிக்கப்பட் டுள்ளது.
, பரீட்சை மத்திய நிலையங்களாக செயற்படவுள்ள பாடசாலைகளில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு பணிப் புரை விடுத்துள்ளார்.
நாடளாவிய ரீதியில் 2,888 பரீட்சை மத்திய நிலையங்களில் எதிர்வரும் 15 ஆம் திகதி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நடத்தப்படவுள்ளது.