போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்: போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

Date:

வத்திகான் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் குறித்து வேதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், ‘இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது.

பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டு வருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன.

போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்’ என்றார்.

இதனிடையே இஸ்ரேல்- பலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...