வளிமண்டலத்தில் புதிய மாற்றம்: அறிவிப்பு வெளியானது!

Date:

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள குறைந்த தாழமுக்கமானது, எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் தாழமுக்கமாக வலுப் பெறும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இவ்வாறு வலுப்பெறும் தாழமுக்கமானது, இலங்கையை விட்டு வெளியேறும் என எதிர்பார்ப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடல் பிராந்தியத்தில் காற்றின் வேகம் மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் என்பதுடன், இடைக்கிடை காற்றின் வேகம் 50 முதல் 55 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் எதிர்வு கூறியுள்ளது.

இந்த கடல் பிராந்தியத்தில் அலை சீற்றமாகும் அதேவேளை, குறித்த பகுதியில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாக திணைக்களம் தெரிவிக்கின்றது.

கடற்றொழிலாளர்கள் இந்த கடல் பிராந்தியத்தை பயன்னபடுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வளிணமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...