128 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்க பரிந்துரை!

Date:

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சலஸ் நகரில் 2028ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டை சேர்க்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

முதன்முதலாக 1900ஆம் ஆண்டு பாரிஸில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் கிரிக்கெட்  விளையாடப்பட்டது.

அதன் பின்னர் 128 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் விளையாடப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டுடன் சேர்த்து பேஸ்பால்/சாஃப்ட்பால் (Softball), ஃபிளாக் ஃபுட்பால் (Flag Football), லெக்ராஸ், ஸ்குவாஷ் ஆகிய விளையாட்டுகளும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

மும்பையில் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ள சர்வதேச ஒலிம்பிக் குழுவின் கூட்டத்தில் கிரிக்கெட் உள்ளிட்ட புதிய விளையாட்டுகளைச் சேர்ப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டால் இருபதுக்கு இருபது ஆட்டமாக நடத்த முடியும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

Popular

More like this
Related

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் சாணக்கியன் தனி நபர் பிரேரணை சமர்ப்பிப்பு!

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) முழுமையாக இரத்து செய்யக் கோரி, இலங்கைத்...

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவு.

கடந்த 10 நாட்களுக்குள் இலங்கையில் 5,000-க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்....

A/L விடைத்தாள் மதிப்பீட்டாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த (உயர்தர) பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணியாளர்களுக்கான...