3 தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் அடுத்த வாரம் விவாதத்திற்கு!

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலம் ஆகிய மூன்று தேர்தல் திருத்தச் சட்டமூலங்களும் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் விவாதிக்கப்பட உள்ளன.

எதிர்வரும் வாரம் நவம்பர் 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை குறித்த விவாதம் நடைபெறவுள்ளதுடன், இது தொடர்பான நிகழ்ச்சி நிரல் கடந்த 19ஆம் திகதி கூடிய பாராளுமன்ற விவகாரக் குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம், எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் பாராளுமன்ற வாரத்தின் இறுதி நாளான 10ஆம் திகதி பரிசீலிக்கப்படவுள்ளதுடன், பாராளுமன்றத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதமும் மாகாண சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதமும் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவு செலவுத் திட்ட உரையை நவம்பர் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடத்துவதற்கு பாராளுமன்ற விவகாரக் குழு தீர்மானித்துள்ளது.

இதனடிப்படையில், அதன் இரண்டாம் வாசிப்புக்கான விவாதம் நவம்பர் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஒரு வார காலத்திற்கு நடைபெறவுள்ளதுடன், நவம்பர் 21ஆம் திகதி மாலை 06.00 மணிக்கு வாக்கெடுப்பும் நடத்தப்படவுள்ளது.

வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுவின் விவாதம் நவம்பர் 22ஆம் திகதி முதல் டிசம்பர் 13ஆம் திகதி வரை 19 நாட்களுக்கு நடைபெற உள்ளது.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...